இதுவும் அது

348.பார்சி றுத்தலிற் படைபெ ருத்ததோ
      படைபெ ருத்தலிற் பார்சி றுத்ததோ
நேர்செ றுத்தவர்க் கரிது நிற்பிடம்
     நெடுவி சும்பலால் இடமு மில்லையே.

     (பொ-நி.)  படை  பெருத்ததோ,  பார் சிறுத்ததோ;  நிற்பிடம் அரிது;
விசும்பலால் இடம் இல்லை; (எ-று.)

     (வி-ம்.) பார்-உலகம். சிறுத்தல் சிறிதாக இருத்தல். செறுத்தவர்-சினந்து
பொருவோர். விசும்பு-வானம்.                                 (37)