தேர்ப்படையின் சிறப்பு 352. | இருநி லத்திடர் உடைபடு முருளன | | இருபு டைச் சிற குடையன முனைபெறின் எதிர்ப றப்பன விடுநுக மொடுகடி திவுளி முற்படின் இதுபரி பவமெனும் ஒருநி னைப்பினை உடையன வினையன உயர்செய் மொட்டொடு மலரென நிறுவிய ஒழித ரச்செரு உறுபுனல் உமிழ்வன உலக ளப்பன இரதமும் மருவியே. |
(பொ-நி.) உருளன, சிறகுடையன, பறப்பன, நினைப்பினையுடையன; வினையன, நிறுவிய, புனல் உமிழ்வன, உலகளப்பன, இரதமும் மருவி; (எ-று.) (வி-ம்.) திடர்-மேடு, உருள்-சக்கரம். இருபுடை-இரண்டு பக்கம், முனை- போர்முனை. நுகம் - நுகத்தடி. இவுளி - குதிரை. பரிபவம் - மானக்கேடு. வினையன -பல்வகை வேலைப்பாடமைந்தன. உயர்செய் -மேலான. நிறுவிய-இயற்றப்பட்டன. செரு - போர். புனல் -நீர். (41) |