வீரரின் ஆரவாரம் 354. | விழித்த விழிதனி விழித்த விருதர்கள் | | விடைத்து வெடுவெடு சிரித்தவாய் தெழித்த பொழுதுடல் திமிர்க்க இமையவர் திகைக்கண் மதகரி திகைக்கவே. |
(பொ-நி.) விருதர்கள், வாய்தெழித்தபொழுது, இமையவர் உடல் திமிர்க்க, மதகரி திகைக்க; (எ-று.) (வி-ம்.) விழித்த - இயல்பாகவிழித்த. விழித்த - சினத்தால் விழித்த. விருதர்கள் - வீரர்கள். விடைத்தல் - பெருமிதங்கொள்ளல். வெடுவெடு: ஒலிக்குறிப்பு. தெழித்தல்-ஒலிசெய்தல். திமிர்க்க-நடுங்க. திகை-(எட்டுத்) திசை. மதகரி-திக்குயானைகள். (43) |