குதிரையின் செயல் 355. | உகத்தின் முடிவினில் உகைத்த கனைகடல் | | உவட்டி யெனமுகில் முகட்டின்மேல் நகைத்த விடுபரி முகக்கண் நுரைசுர நதிக்கண் நுரையென மிதக்கவே. | (பொ-நி.) கனைகடல் உவட்டி என, முகில் முகட்டின்மேல், நகைத்தபரி முகக்கண் நுரை, சுரநதிக்கண் நுரை என மிதக்க; (எ-று.) (வி-ம்.) உகம்-ஊழிக்காலம.் உகைத்தல்-மேலெழுப்புதல். உவட்டுதல்- மேலெழுதல். முகில்-மேகம். முகடு-உச்சி. நகைத்த-விளங்கித் தோன்றிய. பரி- குதிரை. முகக்கண் - முகத்தில். சுரநதி - கங்கையாறு, குதிரைகள் முகின் முகடுவரை பாய்ந்து வாயில் நுரை தோன்ற நின்றன என்க. (44) |
|
|