யானையின் செயல்

356.கழப்பில் வெளில்சுளி கதத்தில் இருகவுள்
      கலித்த கடம்இடி பொறுத்தபோர்க்
குழப்பி வருமுகில் முழக்கில் அலைகடல்
     குளிக்கும் முகில்களும் இடக்கவே.

     (பொ-நி.) கழப்பு இல், வெளில் சுளி, கடம் இடிபொறுத்த உழப்பிவரும்,
முகின் முழக்கில் முகில்களும் இடக்க; (எ-று.)

     (வி-ம்.)  கழப்பு   -  சோம்பல்.  வெளில்  -  கட்டுத்தறி.  சுளித்தல்
சினத்தல்.  கதத்தில்  வெளில்  சுளிஎன இ யைக்க. கவுள்-கன்னம். கலித்த-தோன்றிய.  கடம்  - மதநீர்.  இடி  -  இடிபோன்ற  பேரொலி.  பொறுத்த-கொண்டுள்ள.   கடத்தையும்  இடியையும்   பொறுத்த   முகில்   (யானை)   என்க.   உழப்பி   வருதல் - மனவெழுச்சியுடன்  வருதல்.  முகில் போன்ற யானை,  முழக்கின் - முழக்கினால், குளிக்கும்- (நீருண்ணப்) படியும், முகில்-
மேகம். இடக்க-பின்வாங்க.                                   (45)