தேர்ப்படையின் செயல்

357.கடுத்த விசையிருள் கொடுத்த வுலகொரு
      கணத்தில் வலம்வரு கணிப்பில்தேர்
எடுத்த கொடிதிசை இபத்தின் மதமிசை
     இருக்கும் அளிகளை எழுப்பவே.

     (பொ-நி.)  கடுத்த  விசை,  உலகு  வலம்வரும்,  தேர்எடுத்த  இருள் கொடுத்த கொடி, அளிகளை எழுப்ப; (எ-று.)

     (வி-ம்.)  கடுத்த - மிகுந்த.   விசை - செலவின்  விரைவு,  கொடிகள்
நிறைந்திருத்தலின்  இருள்  கொடுத்த  வென்க.  வலம்வருதல் -சுற்றிவருதல்.
கணிப்பு-அளவிடுதல். தேர் எடுத்த - தேர்மீது  கட்டிய.  திசை  இபம்-திக்கு  யானைகள், அளி-வண்டு.                                     (46)