| போர்க்கெழுந்தது | 358. | எழுந்தது சேனை யெழலும் | | | இரிந்தது பாரின் முதுகு விழுந்தன கானும் மலையும் வெறுந்தரை யான திசைகள். |
(பொ-நி.) சேனை எழுந்தது; எழலும், பாரின் முதுகு இரிந்தது; கானும் மலையும் விழுந்தன: திசைகள் தரையான; (எ-று.) (வி-ம்.) எழுந்தது-போர்க்கெழுந்தது. இரிந்தது-முரிந்தது. பாரின் முதுகு- பூமியின் மேலிடம். விழுந்தன-நிலைகுலைந்து விழுந்தன. கான்-காடு. வெறுந்தரை-பாழிடம். (47) |