இதுவும் அது

359.அதிர்ந்தன நாலு திசைகள்
      அடங்கின ஏழு கடல்கள்
பிதிர்ந்தன மூரி மலைகள்
     பிறந்தது தூளி படலம்.

     (பொ-நி.)  திசைகள்   அதிர்ந்தன;  கடல்கள்  அடங்கின.  மலைகள் பிரிந்தன; தூளி படலம் பிறந்தது; (எ-று.)

     (வி-ம்.) அடங்கின - ஒலியடங்கின.  பிதிர்தல்-சிதறுதல். மூரி-வலிமை.
தூளிபடலம்-புழுதியின் கூட்டம்.                                (48)