ஊடலும் கூடலும் விழைந்த இயல்புகூறி விளித்தது 36. | மெய்யே கொழுநர் பிழைநலிய | | வேட்கை நலிய விடியளவும் பொய்யே உறங்கும் மடநல்லீர் புனைபொற் கபாடம் திறமினோ. |
(பொ-நி.) பிழை நலிய, வேட்கை நலிய, பொய்யே உறங்கும் மடநல்லீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) கொழுநர் - கணவர். நலிய - மனத்தை வாட்ட. வேட்கை- கலவி வேட்கை. உறங்கல் - தூங்கல். ஊடினாராயினும் புணர்ச்சி வேட்கையால் உறங்காராயினர். பொய்யாகவுறங்குதலாவது கண் மூடியவாறு கிடத்தல். (16) |