இதுவும் அது | 360. | நிலத்தரு தூளி பருகி | | | நிறைந்தது வானின் வயிறு வலந்தரு மேக நிரைகள் வறந்தன நீர்கள் சுவறி. | (பொ-நி.) தூளி பருகி வானின் வயிறுநிறைந்தது; மேக நிரைகள் நீர்கள் சுவறி வறந்தன; (எ-று.) (வி-ம்.) தூளி-புழுதி. பருகி-உண்டு. வான்-வானம். வலம் தரு-வலமாக எழுகின்ற. மேக நிரைகள்-மேகக் கூட்டங்கள். வறந்தன-வறண்டன. (49) |
|
|