இதுவும் அது 361. | தயங்கொளி ஓடை வரைகள் | | தருங்கட தாரை மழையின் அயங்களின் வாயின் நுரையின் அடங்கின தூளி அடைய. |
(பொ-நி.) வரைகள் தரும் கடதாரை மழையின் அயங்களின் வாயின் நுரையின் தூளி அடைய அடங்கின. (எ-று.) (வி-ம்.) ஓடை - நெற்றிப் பட்டம். வரை - மலைபோன்ற யானை. கடதாரை - மதநீர். அயம்-குதிரை. அடைய - முற்றும். (50) |