போர்மேற் செலவு

362.எழுதூ ளியடங் கநடந் துதயத்
      தேகுந் திசைகண் டதுமீ ளவிழும்
பொழுதே கலொழிந் துகடற் படையெப்
     பொழுதுந் தவிரா துவழிக் கொளவே.

     (பொ-நி.)கடற்படை;  நடந்து,  ஏகுந்திதசை  கண்டு,  ஏகல்  ஒழிந்து,
எப்பொழுதும் தவிராது வழிக்கொள; (எ-று.)

     (வி-ம்.) தூளி-புழுதி.  தூளியடங்க  நடந்தது, மேற்செய்யுளில் கூறியது.
உதயம் - ஞாயிற்றின்  தோற்றம்.  ஏகுந்திசை  காணுதலாவது  ஏகுதல். அது;
ஞாயிறு.   ஏகல்   வழிந்து   -  தங்கித்   துயின்று.  எப்பொழுதும் - ஒரு பகற்பொழுதும்.வழிகொள-பயணஞ் செய்ய.                      (51)