கருணாகரன் செலவு

363.தண்ணா ரின்மலர்த் திரள்தோ ளபயன்
      தானே வியசே னைதனக் கடையக்
கண்ணா கியசோ ழனசக் கரமாம்
     கருணா கரன்வா ரணமேற் கொளவே.

    (பொ-நி.) அபயன்  ஏவிய  சேனை  தனக்கு,  கண்ணாகிய,  சோழன்
சக்கரமாம் கருணாகரன் வாரணம் மேற்கொள; (எ-று.)

     (வி-ம்.) ஆர் - ஆத்தி.  கண்ணாகிய  கருணாகரன்  என்க. அடைய-
முற்றும். குலோத்துங்கனாகிய   திருமாலுக்குக்   கருணாகரனாகிய   சக்கரம்  பொருந்திய தென்க. வாரணம் - யானை.
                                                         (52)