பல்லவ வேந்தன் செலவு

364.தொண்டை யர்க்கரசு முன்வ ருஞ்சுரவி
      துங்க வெள்விடை யுயர்த்தகோன்
வண்டை யர்க்கரசு பல்ல வர்க்கரசு
     மால்க ளிற்றின்மிசை கொள்ளவே.

     (பொ-நி.) வண்டையர்க்கரசு  முன்வரும்  தொண்டையர்க்கரசு, விடை
உயர்த்த கோன், பல்லவர்க்கரசு களிற்றின் மிசை கொள்ள; (எ-று.)

     (வி-ம்.) முன்வரும் - முன்பிறந்த. சுரவி -தெய்வத்தன்மை பொருந்திய,
துங்கம் - உயர்வு.  விடை - எருது.   விடை;  பல்லவர்க்குக்  கொடி என்க,
வண்டையர்க்கரசு: கருணாகரன்.                               (53)