வாணகோவரையன் முடிகொண்ட சோழன் செலவு

365.வாசி கொண்டரசர் வார ணங்கவர
      வாண கோவரையன் வாண்முகத்
தூசி கொண்டுமுடி கொண்ட சோழனொரு
     சூழி வேழமிசை கொள்ளவே.

     (பொ-நி.)   வாணகோவரையன்,   வாரணம்  கவர,   தூசி கொண்டு
முடிகொண்ட சோழன் வேழமிசை கொள்ள; (எ-று.)

     (வி-ம்.) வாசி - வேறுபாடு.  வாரணம் - யானை. தூசி -குதிரை. சூழி-
முகபடாம். வேழம் - யானை.                                (54)