ஆறுகள் பல கடந்தமை

367.பாலா றுகுசைத் தலைபொன் முகரிப்
      பழவா றுபடர்ந் தெழுகொல் லியெனும்
நாலா றுமகன் றொருபெண் ணையெனும்
     நதியா றுகடந் துநடந் துடனே.

     (பொ-நி.) நாலாறும்   அகன்று,  பெண்ணையெனும்  நதியாறு கடந்து,
உடனே; (எ-று.)

     (வி-ம்.)   பாலாறு,    குசைத்தலை,   பொன்முகரி,   கொல்லிஎனும்
நாலாறென்க. நதியாறு - ஆற்றுவழி.                            (56)