இதுவும் அது

368.வயலா றுபுகுந் துமணிப் புனல்வாய்
      மண்ணா றுவளங் கெழுகுன் றியெனும்
பெயலா றுபரந் துநிறைந் துவரும்
     பேரா றுமிழிந் ததுபிற் படவே.

     (பொ-நி.) வயலாறு புகுந்து,  மண்ணாறும்  குன்றியெனும் பெயலாறும்,
பேராறும் பிற்பட இழிந்தது (சேனை); (எ-று.)

     (வி-ம்.) வயலாறு-வயல்வழி. மணிப்புனல்-தெளிந்தநீர். வாய் மண்ணாறு:
வினைத்தொகை. வாய்தல்-பொருந்துதல். கெழு-பொருந்திய.  பெயலாறு-மழை
பெயலால் வற்றாமற்பெருகிவரும் ஆறு. பரந்து-பரவி. பேராறு-கிருஷ்ணா நதி.
இழிந்தது-கடந்து சென்றது.                                   (57)