இதுவும் அது 369. | கோதா வரிநதி மேலா றொடுகுளிர் | | பம்பா நதியொடு சந்தப்பேர் ஓதா வருநதி ஒருகோ தமையுடன் ஒலிநீர் மலிதுறை பிறகாக. |
(பொ-நி.) கோதாவரியொடு, பம்பா நதியொடு சந்தப்பேர் ஓதாவரு நதி கோதமையுடன், நீர்மலி துறை பிறகாக; (எ-று.) (வி-ம்.) காயத்திரி சந்தங்களில் ஒன்று. சந்தப்பேர் ஓதாவரு நதி- காயத்திரி நதி. கோதமை - கௌதமியாறு. மலிதுறை - நீர் மிக்க துறையாகிய இடம். பிறகாக-பின்னாகும்படி. (58) |