கலவி மயக்கநிலை கூறி விளித்தது

37.போக அமளிக் களிமயக்கில்
     புலர்ந்த தறியா தேகொழுநர்
ஆக அமளி மிசைத்துயில்வீர்
   அம்பொற் கபாடம் திறமினோ.

     (பொ-நி.)  களி மயக்கில், புலர்ந்த தறியாதே, ஆகஅமளி மிசைத் துயில்வீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) போகமயக்கு என இயைக்க. போகம் -கலவி இன்பம். அமளி -
படுக்கை.  களிமயக்கு -கள்ளுண்டது போன்ற  மயக்கு.  புலர்தல் - விடிதல்.
கொழுநர் - கணவர். ஆகம்-மார்பு. துயில் - தூக்கம். விடிந்தது தெரியாமல்
கணவர் மார்பிடத்தே தூங்கினர் என்க.                           (17)