கலிங்கம்புகுந்து செய்த செயல் 370. | கடையிற் புடைபெயர் கடலொத் தமரர் | | கலங்கும் பரிசுக லிங்கம்புக் கடையப் படரெரி கொளுவிப் பதிகளை அழியச் சூறைகொள் பொழுதத்தே. |
(பொ-நி.) கடல் ஒத்து, கலங்கும் பரிசு, புக்கு, எரி கொளுவி, சூறைகொள் பொழுதத்து; (எ-று.) (வி-ம்.) கடை - ஊழிக்காலம். புடைபெயர் - நிலைதடுமாறி. அமரர்- தேவர்கள். பரிசு-தன்மை. எரி-தீ. பதி-ஊர். சூறைகொள்-கொள்ளையடிக்கின்ற பொழுதத்து; அத்து; சாரியை. (59) |