கலிங்கர் நிலை 371. | கங்கா நதியொரு புறமா கப்படை | | கடல்போல் வந்தது கடல்வந்தால் எங்கே புகலிடம் எங்கே யினியரண் யாரே அதிபதி யிங்கென்றே. |
(பொ-நி.) படைகடல்போல் வந்தது; கடல் வந்தால் இங்கே புகலிடமெங்கே, அரண் எங்கே அதிபதி யார் என்று; (எ-று.)
(வி-ம்.) கடல்போல் வந்தபடையாதலின், அதன் பெருக்கத்தால், அது வடக்கின்கண் கங்கையும் அணித்தாம்படி பரவி நின்றதுபோல் காணப்பட்டதென்க. புகல்இடம் - செல்லுதற்கேற்ற இடம். அரண்-பாதுகாவல். அதிபதி-அரசன். (60) |