இதுவும் அது

372.இடிகின் றனமதில் எரிகின் றனபதி
      எழுகின் றனபுகை பொழிலெல்லாம்
மடிகின் றனகுடி கெடுகின் றனமினி
     வளைகின் றனபடை பகையென்றே

     (பொ-நி.)   இடிகின்றன,   எரிகின்றன,   எழுகின்றன,   மடிகின்றன,
கெடுகின்றனம் வளைகின்றன என்றே; (எ-று.)

     (வி-ம்.) பதி-ஊர்.  பொழில்-சோலை.  மடிகின்றன-அழிக்கப்படுகின்றன.
வளைகின்றன - சுற்றிக்கொள்கின்றன.  கெடுகின்றனம்:  தன்மைவினை; பகை
படை எனஇயைக்க.                                         (61)