கலிங்கர் அரசனிடம் முறையிட்டது 373. | உலகுக் கொருமுதல் அபயற் கிடுதிறை | | உரைதப் பியதெம தரசேயெம் பலகற் பனைகளை நினைவுற் றிலைவரு படைமற் றவன்விடு படையென்றே. |
(பொ-நி.) அரசே, இடுதிறை உரைதப்பியது; எம் கற்பனைகளை நினைவுற்றிலை; வருபடை அவன் விடுபடை என்று; (எ-று.) (வி-ம்.) உலகுக்கு ஒரு முதல் - உலகத்துக்கு ஒப்பற்ற தலைவன். அபயன் - (குலோத்துங்க) சோழன், பயமில்லாதவன் என்று பொருள்; சோழமன்னன் யார்க்கும் அஞ்சாதவனாகலான், இப்பெயரால் அழைக்கப்பெற்றான். உரை தப்பியது -சொல்தப்பியது. கற்பனை முன்னறிந்து சொல்லிய சொல். அவன்: குலோத்துங்கன். (62) |