இதுவும் அது 374. | உரையிற் குழறியும் உடலிற் பதறியும் | | ஒருவர்க் கொருவர்முன் முறையிட்டே அரையிற் றுகில்விழ அடையச் சனபதி அடியிற் புகவிழு பொழுதத்தே. | (பொ-நி.) குழறியும், பதறியும், முறையிட்டு, துகில்விழ, சனபதி அடியில் புக விழு பொழுதத்து; (எ-று.) (வி-ம்.) குழறி-சொற்கள் தடுமாறி. பதறி-கடுக்கங் கொண்டு. துகில்-ஆடை. அடைய-எல்லாம். சனபதி-அரசன். அடி-பாதம். (63) |
|
|