கலிங்க வேந்தன் மொழிந்தது 376. | வண்டினுக்கும் திசையானை மதங்கொடுக்கும் | | மலர்க்கவிகை அபயற் கன்றித் தண்டினுக்கும் எளியனோ எனவெகுண்டு தடம்புயங்கள் குலுங்க நக்கே. |
(பொ-நி.) கொடுக்கும் அபயற்கன்றி, தண்டினுக்கும் எளியனோ என வெகுண்டு நக்கு, (எ-று.) (வி-ம்.) யானை மதம்: ஆறன் தொகை. மலர் கவிகை - பரந்த வெண்கொற்றக்குடை. கொடுக்கும் அபயன் என்க. இதனால் அவன் அரசாட்சியின் பரப்புக் கூறியவாறாம். தண்டு -(அவனது) சேனை. தடம்புயம்- பெருத்த தோள்கள். (65) |