இதுவும் அது

377.கானரணும் மலையரணும் கடலரணும்
      சூழ்கிடந்த கலிங்கர் பூமி
தானரண முடைத்தென்று கருதாது
     வருவதுமத் தண்டு போலும்.

     (பொ-நி.)  அத்  தண்டு.  கலிங்கர்  பூமி,  அரணம்  உடைத்தென்று
கருதாது வருவது போலும்; (எ-று.)

     (வி-ம்.) கான்-காடு;  அரண் - பாதுகாப்பு. தண்டு-சேனை.
                                                       (66)