இதுவும் அது

379.அரசர் சீறுவ ரேனும்அடியவர்
      உரைசெ யாதொழி யார்க ளுறுதியே.

     (பொ-நி.)  அரசர்  சீறுவரேனும்,  அடியவர்  உறுதி  உரை  செயாது
ஒழியார்கள்; (எ-று.)

     (வி-ம்.)  சீறுதல்-சினங்கொள்ளுதல். அடியவர்: அமைச்சர் முதலியோர்.
உறுதி-நன்மை பயப்பன.                                    (68) 166