கணவர் வரவு பார்க்கும் நிலை கூறி விளித்தது 38. | ஆளுங் கொழுநர் வரவுபார்த்து | | அவர்தம் வரவு காணாமல் தாளும் மனமும் புறம்பாகச் சாத்தும் கபாடம் திறமினோ. | (பொ-நி) கொழுநர் வரவு பார்த்து, வரவு காணாமல் தாளும் மனமும் புறம்பாக, சாத்தும் கபாடம் திறமின்; (எ-று.)
(வி-ம்.) ஆளும்-தம்மை ஆட்கொண்ட; தாம் ஆளும். கொழுநர்-கணவர். தாள்-பாதம். புறம்பு-வாயிற்படிக்கு வெளியே, பாதமும் மனமும் வாயிலுக்கு வெளியே சென்று சென்று பார்க்க விழைந்தனவாம் என்க. (18) |