இதுவும் அது 382. | போரின் மேற்றண் டெடுக்கப் புறக்கிடும் | | சேரர் வார்த்தை செவிப்பட்ட தில்லையோ. |
(பொ-நி.) தண்டெடுக்கப் புறக்கிடும் சேரர் வார்த்தை செவிப்பட்டதில்லையோ? (எ-று.) (வி-ம்.) புறக்கிடல் - முதுகிடல். சேரர்வார்த்தை - சேரமன்னர்களின் செய்தி, செவிப்பட்டது - காதிற் கேட்டது. (71) |