இதுவும் அது

384.மாறு பட்டெழு தண்டெழ வத்தவர்
 ஏறு பட்டது மிம்முறை யேயன்றோ.

     (பொ-நி.) தண்டு எழ, வத்தவர் ஏறு பட்டதும், இம்முறையே யன்றோ?
(எ-று.)

     (வி-ம்.)  மாறுபட்டு -  பகைமைகொண்டு.  தண்டு - (குலோத்துங்கன்)
சேனை. வத்தவர் - வத்தவ  நாட்டவர்.  ஏறு  -  அரசன்;  வத்தவ  நாட்டு  மன்னனாகிய தாராவர்ஷன். இம்முறை-இவ்வாறு.
                                                      (73)