கொங்கையின் அழகு கூறி விளித்தது

39. உந்திச் சுழியின் முளைத்தெழுந்த
     உரோமப் பசுந்தாள் ஒன்றில் இரண்டு
அந்திக் கமலங் கொடுவருவீர்
   அம்பொற் கபாடம் திறமினோ.

     (பொ-நி) உந்திச் சுழியின் எழுந்த பசுந்தாள் ஒன்றில் இரண்டு அந்திக் கமலம் கொடு வருவீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) உந்திச்சுழி-கொப்பூழ். உரோமம்-மயிரொழுங்கு. தாள்-தண்டு. அந்திக்கமலம்-மாலையில் காணப்படும் தாமரைமொட்டுப் போன்ற கொங்கைகள். கொடு (இடைக்குறை)-கொண்டு. ஒரு தண்டில் இரண்டு கமலம் போன்றன கொங்கைகள்.                                        (19)