கேட்ட கலிங்கர்கோன் மொழிந்தது 390. | என்றிவையு ரைத்தலுமெ னக்கெதி | | ருரைக்கஇமை யோர்களு நடுங்கு வர்புயக் குன்றிவைசெ ருத்தொழில் பெறாதுநெடு நாள்மெலிவு கொண்டபடி கண்டு மிலையோ. |
(பொ-நி.) உரைத்தலும், எதிர் உரைக்க இமையோர்களும் நடுங்குவர்; இவைதொழில் பெறாதுமெலிவு கொண்டபடி கண்டு மிலையோ? (எ-று.) (வி-ம்.) எதிர் உரைத்தல் - மாறுபட்டுக்கூறல். இமையோர் - தேவர். புயக்குன்று-தோளாகியமலை. நெடுநாள்மெலிவு-நீண்டநாட்களாக வாடியிருத்தல். பலகாலமாகப் போரின்றி இருந்ததால் தன்தோள்களை வாடியிருப்பதாகக் கூறினான். இதனைப் 'போரென்ன வீங்கும் பொருப்பன்ன பொலன்கொள் திண்தோள்மாரன் அனையான்' என்பர் கம்ப நாடர். (79) |