இதுவும் அது

391.பிழைக்கவுரை செய்தனைபி ழைத்தனை
      யெனக்குறுதி பேசுவது வாசி கெடவோ
முழைக்கண் இள வாளரி முகத்தெளி
     தெனக்களிறு முட்டியெதிர் கிட்டி வருமோ.

     (பொ-நி.) உரை  செய்தனை; பிழைத்தனை; பேசுவது வாசி கெடவோ?
அரிமுகத்து எளிதென, களிறு கிட்டி முட்டி வருமோ? (எ-று.)

     (வி-ம்.) பிழைக்க-தவறுண்டாக, -பிழைத்தனை-உயிர்பிழைத்தாய். வாசி-(என்)இயல்பு. முழை-குகை. வாள் -கொடுமை. அரி - சிங்கம். முட்டி வருதல்-
தாக்க வருதல். எதிர் கிட்டி -நேரில் நெருங்கி.                  (80)