| இதுவும் அது | 392. | என்னுடைய தோள்வலியு மென்னுடைய | | | வாள்வலியும் யாதுமறி யாது பிறர்போல் நின்னுடைய பேதைமையி னாலுரைசெய் தாய்இதுநி னைப்பளவில் வெல்ல அரிதோ. |
(பொ-நி.) தோள்வலியும், வாள்வலியும் யாதுமறியாது, பேதைமையினால் உரைசெய்தாய், நினைப்பளவில், வெல்ல அரிதோ? (எ-று.) (வி-ம்.) பேதைமை-அறியாமை. நினைப்பளவில் - நினைத்த அளவில். அரிதோ-அரிதன்று என்றபடி. (81) |