கலிங்கப்படை எழுந்த ஆர்ப்புக் கூறியது

395.கலிங்கமவை யேழினு மெழுந்ததொரு
      பேரொலி கறங்குகட லேழு முடனே
மலங்கியெழு பேரொலி யெனத்திசை
     திகைப்புற வருந்தொனி யெழுந்த பொழுதே.

     (பொ-நி.) கலிங்கமேழினும்  எழுந்த  பேரொலி,  கடல்  ஏழும்  ஏழு
பேரொலியென, திசை திகைப்புற வரும், தொனி  எழுந்த  பொழுது; (எ-று.)

     (வி-ம்.) கலிங்க நாடு ஏழு  பிரிவாய்  அமைந்திருந்ததென்க.  கறங்கு கடல்- ஒலிக்கின்ற  கடல். மலங்குதல்-கலங்குதல்.  திசை;  இடவாகு  பெயர். திகைப்பு - திக்குமுக்காடிப் போதல். தொனி-ஓசை.               (84)