படை எழுச்சி கூறியது 396. | தொளைமுக மதமலை யதிர்வன | | தொடுகடல் பருகிய முகிலெனவே வளைமுக நுரையுக வருபரி கடலிடை மறிதிரை யெனவெழவே. |
(பொ-நி.) மதமலை அதிர்வன, முகிலென ( எழ), வருபரி மறி திரை என எழ; (எ-று.)
(வி-ம்.) தொளை முகம் - முகத்தே தொளை பொருந்திய துதிக்கையுடையது. மதமலை -யானை. அதிர்வன முகிலென்று தோன்றும்படி (போர்க்கு) எழுந்தன என்க. வளை முகம் - வளைந்த வாய். பரி-குதிரை. மறிதல்-சுருண்டு விழுதல். திரை-அலை. எழ-(போர்க்கு) எழ. (85) |