இதுவும் அது

399.விசைபெற விடுபரி இரதமும்
      மறிகடல் மிசைவிடு கலமெனவே
இசைபெற உயிரையும் இகழ்தரும்
     இளையவர் எறிசுற வினம் எனவே.

     (பொ-நி.) இரதமும்,  கடல்மிசைவிடு  கலமென,  இளையவர் சுறவினம் என; (எ-று.)

     (வி-ம்.) விசை பெற-விரைவு  கொள்ள.  பரி-குதிரை. மிசைவிடு-மேலே
விட்ட.  கலம் - மரக்கலம்.   உயிரையும்  இகழ்தரும் - தம்  உயிரைக்கூடப்
பொருட்படுத்தாத.  இதனைச்,  'சுழலும்  இசைவேண்டி  வேண்டா  உயிரார்'
என்பர், வள்ளுவர். இளையவர்-வீரர்கள். சுறவு-சுறாமீன். இனம்-கூட்டம். 
                                                        (88)