பெண்கள் வேளம் புகுந்த தன்மை கூறி விளித்தது 40. | மீனம்புகு கொடிமீனவர் விழியம்புக ஓடிக் | | கானம்புக வேளம்புகு மடவீர் கடை திறமின். |
(பொ-நி.) மீனவர் ஓடிக்கானம்புக, வேளம்புகு மடவீர் திறமின்; (எ-று)
(வி-ம்.) மீனம்புகு கொடி - மீன் வடிவெழுதிய கொடி. மீனவர்- பாண்டியர். விழி-கண். அம்பு-நீர். கானம்-காடு. வேளம் - சிறைப்பட்ட மகளிர் வாழும் அரண்மனை. மடவார்-பெண்கள். பாண்டியர் தோற்றோட அவர் நாட்டுப் பெண்கள் வேளம் புகுந்தனர். தோற்ற அரசரின் மகளிரைச் சிறை பிடித்துத் தனியிடத்தில் அடைப்பது பண்டைக்கால மன்னரின் வழக்கு. (20) |