இதுவும் அது 400. | விடவிகள் மொடுமொடு விசைபட | | முறிபட வெறிபட நெறிபடவே அடவிகள் பொடிபட அருவிகள் அனல்பட அருவரை துகள்படவே. |
(பொ-நி.) விடவிகள் முறிபட, எறிபட, நெறிபட அடவிகள் பொடிபட, அருவிகள் அனல்பட, அருவரை துகள்பட; (எ-று.) (வி-ம்.) விடவி-மரம். மொடுமொடு: ஒலிக்குறிப்பு. விசைபட-விரைந்து. எறிபட-அழிய. மரங்கள் முறிபடவும் எறிபடவும் என்க. நெறி-வழி. பட- உண்டாக. அடவி-காடு. அருவிகள்-ஆறுகள். அனல்பட-நெருப்பின் தன்மை பெற வெப்பப் பட.வரை-மலை. துகள்பட -பொடியாக நொறுங்க. (89) |