இதுவும் அது
 
401.அறைகழல் இளையவர் முறுகிய
      சினவழல் அதுவட வனலெனவே
முறைமுறை முரசுகள் மொகுமொகு
     வதிர்வன முதிர்கடல் அதிர்வெனவே.

     (பொ-நி.) இளையவர் சின அழல், வடஅனல் என, முரசுகள் அதிர்வன
கடல் அதிர்வென ; (எ-று.)

     (வி-ம்.) அறை கழல்-ஒலிக்கும் வீரக்கழல்.  இளையவர்-வீரர். முறுகிய-
மிகுந்த. சின அழல்-கோபத் தீ. வட அனல்-வடவைத் தீ. அதிர்வு -முழக்கம்.
முதிர்-பழைமையான; பெரிய.                                 (90)