இதுவும் அது
 

402.ஒருவர்த முடலினில் ஒருவர்தம்
      உடல்புக உறுவதோர் படியுகவே
வெருவர மிடைபடு நடுவொரு
     வெளியற விழியிட அரிதெனவே.

     (பொ-நி.)  உடலில்  உடல்  புக,  படி  உக, மிடை படை நடு விழி
இட அரிதென, வெளி அற; (எ-று.)

     (வி-ம்.) படி-உலகம்.  உக-அழிய.  உக மிடை படை என்க. வெருவர-
கண்டோர்)  அச்சம்  பொருந்த.  மிடைதல்  நெருங்குதல். வெளி-வெற்றிடம்.
விழி இட அரிது -(வெற்றிடத்தைக்)கண்ணால் காணல் அரிது.
                                                         (91)