போர்க்கெழுதல் கூறியது
 
403.வெளியரி தெனவெதிர் மிடைபடை
      மனுபரன் விடுபடை யதனெதிரே
எளிதென இரைபெறு புலியென
     வலியினொ டெடுமெடு மெடுமெனவே.

     (பொ-நி.) மிடைபடை, விடுபடையதன்  எதிரே,  எளிதென, புலியென,
எடும் எடும் எடும், எனவே, (எ-று.)

     (வி-ம்.) வெளி-இடைவெளி.  எதிர்படை:  வினைத்தொகை. மிடைதல்-
நெருங்குதல். மனுபரன்: குலோத்துங்கன்: மக்களுக்குட் சிறந்தவன்.   (92)