இதுவும் அது

405.வெருவர வரிசிலை தெரித்தநாண்
      விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை அவரவர் தெழித்ததோர்
     தெழிஉல குகள்செவி டெடுக்கவே.

     (பொ-நி.)   தெரித்த   நா(ணால்)   திசைமுகம் வெடிக்க, தெழி(யால்) உலகுகள் செவிடெடுக்க; (எ-று.)

     (வி-ம்.)  வெருவருதல்-அச்சம் விளைதல். வரி சிலை-கட்டமைந்த வில்.
நாண்-நாணோசை(யால்)நாண்விசை: ஆறன் தொகை. முகம்-இடம். செரு-போர்.
அவர்-வீரர். தெழித்தல்-அதட்டுதல்; தெழி-ஒலியால். செவிடெடுக்க-செவிடுபட.
                                                           (2)