இருபடைகளும் கைகலந்தமை
 
406.எறிகட லொடுகடல் கிடைத்தபோல்
      இருபடை களுமெதிர் கிடைக்கவே
மறிதிரை யொடுதிரை மலைத்தபோல்
     வருபரி யொடுபரி மலைக்கவே.

     (பொ-நி.)   இருபடைகளும்,   கடலொடு,   கடல்    கிடைத்தபோல்,
எதிர்கிடைக்க, பரியொடு பரி, திரையொடு திரைமலைத்த போல், மலைக்க;
(எ-று.)

     (வி-ம்.)  எறிதல் - அலைவீசுதல்.  கிடைத்தல் - அகப்படுத்தப்படுதல். கிடைக்க-எதிர்க்க. மறிதல் - சுருண்டு வீழ்தல். திரை-அலை. மலைத்தல்-போர் செய்தல், பரி -குதிரை.                                        (3)