யானைப்படையும் தேர்ப்படையும் மலைந்தமை 407. | கனவரை யொடுவரை முனைத்தபோல் | | கடகரி யொடுகரி முனைக்கவே இனமுகில் முகிலொடு மெதிர்த்தபோல் இரதமொ டிரதமும் எதிர்க்கவே. |
(பொ-நி.) கரியொடு கரி. வரையொடு வரைமுனைத்தபோல் முனைக்க, இரதமோ டிரதமும், முகில் முகிலொடு மெதிர்த்தபோல் எதிர்க்க; (எ-று.)
(வி-ம்.) வரை - மலை. முனைத்தல் -போர்புரிதல். கரி-யானை.முகில்-மேகம். இரதம்-தேர்ப்படை. (4) |