வீரர்களும் அரசர்களும் மலைந்தமை
 

408.பொருபுலி புலியொடு சிலைத்தபோல்
      பொருபட ரொடுபடர் சிலைக்கவே
அரியினொ டரியினம் அடர்ப்பபோல்
     அரசரும் அரசரும் அடர்க்கவே.

     (பொ-நி.) படரொடு  படர்  புலியொடு  புலி சிலைத்தபோல் சிலைக்க,
அரசரும் அரசரும்  அரியினொடரியினம் அடர்ப்பபோல்  அடர்க்க; (எ-று.)

     (வி-ம்.) சிலைத்தல்-ஆர்த்துப்பொருதல். படர்-படைவீரர். அரி-சிங்கம்.
அடர்த்தல்-நெருங்கிப் பொருதல்.                               (5)