குருதியாற்றியல்பு 410. | குருதியின் நதிவெளி பரக்கவே | | குடையினம் நுரையென மிதக்கவே கரிதுணி படுமுடல் அடுக்கியே கரைஎன இருபுடை கிடக்கவே. | (பொ-நி.) குருதியின் நதி பரக்க, குடை இனம் நுரைஎன மிதக்க, கரி உடல் இருபுடை கரை என, கிடக்க; (எ-று.) (வி-ம்.) குருதி-செந்நீர். வெளி-வெற்றிடமெல்லாம். பரக்க-பரவிப்பாய. குடை-வெண்கொற்றக்குடை. கரி-யானை. துணித்தல்-வெட்டுதல். புடை-பக்கம். வெட்டப்பட்ட யானையுடல்கள் குருதியாற்றின் இருபுறமும் கரையைப் போன்றுகிடந்தன வென்க. (7) |
|
|