இதுவும் அது 412. | நிழற்கொடி தழற்கது வலின்கடி | | தொளித்தவை நினைப்பவர் நினைப்ப தன்முனே அழற்படு புகைக்கொடி எடுத்தன புதுக்கொடி அனைத்தினு நிரைத்த தெனவே. |
(பொ-நி.) கொடி, தழல் கதுவலின் ஒளித்தவை, நினைப்பதன்முனே, புதுக்கொடி நிரைத்ததென புகைக்கொடி எடுத்தன; (எ-று.) (வி-ம்.) நிழல்கொடி-நிழலைத் தரும் கொடி. தழல்-நெருப்பு கதுவல்- பற்றுதல். ஒளித்தவை-இருந்த இடம் தெரியாமல் மறைந்தவை. அழல்-தீ. புகைக்கொடி - புகையாகியகொடிகள். அனைத்தினும் - எவ்விடத்தும் துகிற்கொடிகள் மறைந்து புகைக்கொடிகள் தோன்றின என்க. (9) |