இதுவும் அது 413. | இடத்திடை வலத்திடை இருத்திய | | துணைக்கரம் நிகர்த்தன அடுத்த கரியின் கடத்தெழு மதத்திடை மடுத்தன சிறப்பொடு கறுத்தன அவற்றின் எயிறே. |
(பொ-நி.) கரியின் மதத்திடை மடுத்தன. கறுத்தன, எயிறு, துணைக்கரம் நிகர்த்தன; (எ-று.) (வி-ம்.) துணைக்கரம் - இரு கைகள். அடுத்த -எதிர்த்த. கரி-யானை. கடம் - மதச்சுவடு. மடுத்தல் - உட்புகவிடல். கறுத்தன-மதநீர் பட்டமையின் கருநிறம் அடைந்தன. எயிறு - தந்தம். இரு தந்தங்களும் மேலும் இரு கைகளைப்போல தோற்றமளித்தன என்க. (10) |