இதுவும் அது
 
414.எயிறுக ளுடையபொ ருப்பைவ லித்திடை
      எதிரெதிர் இருபணை இட்டுமு றுக்கிய
கயிறுகள் இவையென அக்கர டக்கரி
     கரமொடு கரமெதிர் தெற்றிவ லிக்கவே.

     (பொ-நி.) பொருப்பை  வலித்து,  பணை  இட்டு,  முறுக்கிய கயிறுகள்
இவையென, கரி, கரமொடு கரம் எதிர் தெற்றிவலிக்க; (எ-று.)

     (வி-ம்.) எயிறு - தந்தம். பொருப்பு - யானை. வலித்து - ஒன்று கூட்டி.
பணை - மூங்கில்.  கரடம்   - மதச்சுவடு.  கரி - யானை. கரம் - துதிக்கை. தெற்றுதல்-முறுக்கிக்கொள்ளுதல். வலித்தல்-இழுத்தல். யானைகளைக்கொண்டு 
இரு மூங்கில் துண்டுகளால் கயிறு முறுக்குவிப்பதுபோல் இருந்ததென்க.   
                                                         (11)